முக்கியச் செய்திகள் இந்தியா

3வது அலை – இந்தியா கவனமாக இருக்க வேண்டும்; கீதா கோபிநாத்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.5 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இந்தியா 3வது அலை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,40,01,743 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 15,823 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 226 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,51,189 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 96.4 கோடி தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த கீதா கோபிநாத், இந்தியா தனது நாட்டு மக்களில் 50 சதவிகிதமானோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளது. பல நாடுகள் 40 சதவிகிதத்தையே எட்டவில்லை. ஆனால் இந்தியா 50 சதவிகிதத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. நாடு முழுவதும் ஏறத்தாழ 73 சதவிகிதமானோர் முதல் டோஸ் தடுப்பூயை செலுத்திக்கொண்டுள்ளனர். அதே போல 30 சதவிகிதமனோர் 2 தவனை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

ஆனாலும், நாடு மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவுடன் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில், இந்தியா அடுத்த வாரத்தில் தடுப்பூசி எண்ணிக்கையில் 1 பில்லியனை எட்டிவிடும் என்றும் கீதா தெரிவித்துள்ளார்.

தினசரி பாதிப்பை பொறுத்த அளவில் கேரளா கடந்த 24 மணி நேரத்தில் 7,823 புதிய பாதிப்பை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

இணையத்தை கலக்கும் விலங்குகளின் ட்வீட்!

Vandhana

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

Gayathri Venkatesan

12,500 கிராமங்களுக்கு இணைய சேவை திட்டம் – அமைச்சர் மனோ தங்கராஜ்

Jeba Arul Robinson