முக்கியச் செய்திகள் இந்தியா

புதுச்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்திய விடுமுறை ரத்து..

புதுச்சேரியில் மே ஒன்று மற்றும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் அரசு விடுமுறை நாட்கள் பட்டியலை அம்மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தினமான மே ஒன்றாம் தேதியும், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதியும் அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு விடுமுறை மாற்றியமைக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கு ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, மே 1-ம் மற்றும் அக்டோபர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் விடுமுறை பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு விளக்கமளித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan

திங்கள் முதல் கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு? விக்கிரமராஜா

Halley karthi

தேர்தலில் 3-ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!

Ezhilarasan