மத்திய அரசின் நான்கு திரைப்பட ஊடக அமைப்புகளை தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் மத்திய அரசு இணைத்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய அரசின் திரைப்படப் பிரிவு, திரைப்படவிழாக்கள் இயக்குனரகம், இந்தியாவின் தேசிய திரைப்பட ஆவண காப்பகங்கள், குழந்தைகளுக்கான திரைப்படக்கழகம் ஆகியவை என்எப்டிசி எனப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டு வளர்ச்சிக்கழகத்துடன் இணைக்கப்படுகின்றன.
மனித வளம், கட்டமைப்பு ஆகியவற்றை சேமிக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அமைப்புகளுக்கு இடையேயும் உரிய ஒத்துழைப்புடன் இனி இவை செயல்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது. நான்கு அமைப்புகளிலும் உள்ள ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு ஊழியரும் கைவிடப்படமாட்டார் என்றும் உறுதி அளித்துள்ளது.







