முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி; நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த 18-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 81 பந்துகளில் 101 ரன்களும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களும் குவித்தனர்.

இந்த சதத்தின்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 30வது சதத்தை பூர்த்தி செய்து, ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்தார். அதேபோல் சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 4வது சதத்தை பதிவு செய்துள்ளார். இறுதியாக, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேகப் டஃபி மற்றும் பிளேர் டிக்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே 100 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார். ஆனால் நியூசிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் குறைவான ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக ஹென்றி நிகோல்ஸ் 42 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 34 ரன்களும் குவித்தனர். இறுதியாக நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றி, ஒயிட்வாஷ் செய்தது. முன்னதாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் முழுவதுமாக கைப்பற்றி, இந்தியா ஒயிட்வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

களைகட்டிய காசிமேடு மீன் சந்தை – குவிந்த பொதுமக்கள்

Web Editor

தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்; சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்

EZHILARASAN D

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

Arivazhagan Chinnasamy