ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இடம்பெற்றது.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி 3 மொழிகளில் வெளியானது. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் உலக அளவில் ரூ.1000ம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகளவில் பாராட்டை பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுக்கு ஆர்ஆர்ஆர் படமும் போட்டியிட்டு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை படைத்தது. இதனை அடுத்து நடைபெற்ற கிரிடிக் சாய்ஸ் விருதையும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வென்றது.
இந்நிலையில் 95வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த விஎஃப்எக்ஸ், சிறந்த ஒலி என 6 பிரிவுகளில் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. சிறந்த நடிகருக்கான பட்டியலில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே அமெரிக்க நாளிதழ் கணித்திருந்தது.
ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் வெளியான ”நாட்டு நாட்டு” பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் முதுமலை யானை பராமரிப்பு தம்பதியின் கதையான ‘தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல சிறந்த முழுநீள ஆவணப்பட பிரிவில் ‘All That Breathes’ படம் இடம்பெற்றுள்ளன.