முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 2 லட்சத்து 53 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 26 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 6297 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 91 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 6266 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 2216 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 811 பேருக்கும் திருவள்ளூரில் 1778 பேருக்கும் திருச்சியில் 1459 பேருக்கும் கோவையில் 3250 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

எழுவர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்!

Nandhakumar

கொரோனா குணமடைய காயத்ரி மந்திரம், சுவாச பயிற்சி பலனளிக்குமா? ஆராய மத்திய அரசு நிதி உதவி

Saravana Kumar

“திமுகவில் குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே பதவி”-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

Jeba