தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு இன்று 30,000 கடந்தது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 30,744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,372 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,94,697 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 7,038 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6,452 ஆகக் குறைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 3,886 பேருக்கும்,
30 ஆயிரத்தைக் கடந்த கொரோனாhttps://t.co/WciCN2AH8n | #COVID19 | #Covid19Vaccination | #Covid19Deaths | #Covid19TN pic.twitter.com/wAB01Avokx
— News7 Tamil (@news7tamil) January 22, 2022
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,377 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து 266 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,069 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், 33 பேர் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.