மதுரையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!

மதுரை உசிலம்பட்டி அருகே 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி செல்லும் சாலையின் உச்சியில் உள்ள நரிப்பள்ளி புடவு என்ற பகுதியில்…

மதுரை உசிலம்பட்டி அருகே 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி செல்லும் சாலையின் உச்சியில் உள்ள நரிப்பள்ளி புடவு என்ற பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 50-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஓவியங்களில் சில 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது எனவும், வேட்டையாடுதல், குதிரை வீரர்கள், பாலின உறவு போன்ற ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புத்தூர் மலைப்பகுதியில் 3 ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அடுத்தடுத்து கிடைத்து வருவதாகவும் கூறினர்.

இதையும் படியுங்கள் : வங்கதேசத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 15 பேர் பலி..! 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இதே புத்தூர் மலையின் தென் பகுதியில் ஏற்கனவே இரு பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மலை அடிவாரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் தமிழி எழுத்துக்கள் கொண்ட கல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.