உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தி இருந்தது ஆப்கன். இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆப்கன் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. மூதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 7 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 286 ரன்களை எடுத்து, வெற்றி பெற்றது.







