திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வரும் 24-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இலவச தரிசனம் மூலம் சுவாமியை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த கூட்டம் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் கருதுகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளம் மூலம் மட்டுமே பக்தர்கள் தங்களது டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளது.
தினமும் 28,000 டிக்கெட்டுகள் ஆன்லைனின் வெளியிடப்பட உள்ளதாகவும், போலி இணையங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.