பிரதமர் நரேந்திர மோடியின் காலை தொட்டு வணங்கிய பப்புவா நியூ கினியா பிரதமர்..!!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு  அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் காலை பப்புவா நியூ கினியா பிரதமர்  ஜேம்ஸ் மராபே  தொட்டு வணங்கினார்.  ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7…

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு  அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் காலை பப்புவா நியூ கினியா பிரதமர்  ஜேம்ஸ் மராபே  தொட்டு வணங்கினார். 

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் ஜி7 உறுப்பு நாடுகளை தவிர இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொண்டன. ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உணவு, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட 10 அம்ச திட்டங்களை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று  3ஆம் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் உள்ள அமைதி பூங்காவில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தார். இதையடுத்து,  பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றடைந்தார்.

அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே வரவேற்றார். அப்போது, பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே மோடியின் காலை தொட்டு வணங்கினார். பின்னர், ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி, இசை நிகழ்ச்சி, நடனம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைனைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பப்புவா நியூ கினியாவில் இன்று நடைபெறும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.