ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கெட்டவாடி கிராமத்தில் 100 ஏக்கருக்கும் மேல் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில், வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சௌம்யா.மோ






