இந்தியாவின் கண் சொட்டு மருந்தால் 3 பேர் பலி – அமெ. குற்றச்சாட்டால் பரபரப்பு!

சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீப காலமாகவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன.…

சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சமீப காலமாகவே இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இது இந்திய சுகாதாரத்துறையின் தரத்தின் மீது பெரும் அழுத்தத்தை தந்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம், இந்திய நிறுவனங்கள் தயாரித்த 2 இருமல் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்துள்ள குளோபல் பார்மா ஹெல்கேர் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையை சார்ந்த நிறுவனம் தாயாரித்த கண் சொட்டு மருந்தில் கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த நிறுவனம் தயாரித்து அனுப்பிய 50,000 சொட்டு மருந்து பாட்டில்கள் திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரம் குறைந்துள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது மத்திய அரசுக்கும், மத்திய சுகாதாரத்துறைக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.