மீன் பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

அந்தியூர் அருகே மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிபினேஷன், ராகவன்…

அந்தியூர் அருகே மீன் பிடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிபினேஷன், ராகவன் நந்தகிஷோர் ஆகிய மூன்று சிறுவர்களும், தவிட்டுப்பாளையம் காமராஜர் நகர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த 3 சிறுவர்களும் அந்தியூர் அருகே உள்ள நாட்ராயன் நகர் பகுதியில் உள்ள செங்காட்டு குட்டை என்ற குட்டையில் மாலை மீன் பிடிக்க சென்றுள்ளனர். 3 சிறுவர்களையும் வெகுநேரமாகியும் காணததாதல் பெற்றோர்கள் தேட தொடங்கியத போது தான் சிறுவர்கள் நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்தியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்  3 சிறுவர்களின் உடலையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.