முக்கியச் செய்திகள் தமிழகம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி: குவைத்தில் சிக்கித் தவித்த தமிழர்களுக்கு உதவி

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக குவைத்தில் சிக்கித் தவிக்கும் 35 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் உதவி செய்துள்ளனர்.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 தமிழர்கள், மதுரை மேலூர் அருகே உள்ள வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜென்சியிடம் வெளிநாட்டு வேலைக்காக ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி உள்ளனர். இதனையடுத்து செப்டம்பர் 4ஆம் தேதி அனைவரும் மதுரையிலிருந்து மும்பைக்கும், மும்பையிலிருந்து குவைத்துக்கும் விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குவைத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர்கள் கட்டடப் பணிகளை ஒரு வாரம் மேற்கொண்ட நிலையில், இனி வேலை இல்லை, நீங்கள் வேறு இடத்தில் வேலை பார்த்துக் கொள்ளுங்கள் என நிறுவனம் கூறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பின்னர் ஒரே அறையில் அனைவரும் சிக்கி உள்ளதாகவும், பத்து நாட்களாக உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம், மனு அளித்தனர். இது குறித்து நியூஸ் 7 தமிழ் கடந்த 7ம் தேதி பிரத்யேக செய்தியாக வெளியிட்டது.

இதன் எதிரொலியாக, குவைத்தில் உள்ள வெளிநாடு வாழ் தமிழர் நலச் சங்கத்தினர், பாதிக்கப்பட்டுள்ள 35 தமிழர்களையும் நேரில் சந்தித்துள்ளனர். அவர்களுக்கு 15 நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நியூஸ் 7 தமிழ் செய்தி மூலம், குவைத்தில் தமிழர்கள் சிக்கித் தவிப்பதை அறிந்து, அவர்களுக்கு உதவியதாக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சங்கத்தினர் தெரிவித்தனர். உரிய நேரத்தில் உதவி கிடைப்பதற்கு காரணமாக அமைந்த நியூஸ் 7 தமிழுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

8 ஆண்டுகளில் பாதியாக குறைந்த இடதுசாரி தீவிரவாதம்

Mohan Dass

பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் – பாஜக சீனிவாசன்

Gayathri Venkatesan