சென்னையில் ஸ்கிம்மர் கருவி மூலம் ஏடிஎம் கார்டுகளின் தகவல்களை திருடி பணம் மோசடி செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை முட்டுக்காடு சோதனைச்சாவடி அருகே தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் பயணித்த மூவரும், முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால், அவர்கள் உடமைகளை சோதனையிட்டனர். அவர்களிடம் 60 போலி ஏடிஎம் கார்டுகள், ஐந்து ஸ்கிம்மர் கருவிகள், செல்போன்கள் மற்றும் லேப்டாப் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த லாவா சந்தன் (32), பிரவின் கிஷோர் (30), மற்றும் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா (37), பிரவின்குமார் (29) எனத் தெரியவந்தது. இவர்கள் பல இடங்களில் ஸ்கிம்மர் கருவிகளை கொண்டு பணமோசடியில் ஈடுபட்டு வந்ததை உறுதி செய்த காவல்துறையினர் மூவரையும் குற்றவியல் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







