ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாத 3.26 லட்சம் வணிகர்கள்: வணிக வரித் துறை அதிர்ச்சி தகவல்

சுமார் 3.26 இலட்சம் வணிகர்கள் கடந்த நிதி ஆண்டில் (2021- 2022) ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பது வணிக வரித் துறையால்கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 94 இலட்சம் வணிகர்கள் ரூ. 1,000-க்கும் கீழ்…

சுமார் 3.26 இலட்சம் வணிகர்கள் கடந்த நிதி ஆண்டில் (2021- 2022) ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை என்பது வணிக வரித் துறையால்கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 94 இலட்சம் வணிகர்கள் ரூ. 1,000-க்கும் கீழ் மட்டுமே சாக்கு மற்றும் சேவைகள் வரியினை கடந்த நிதி ஆண்டில் செலுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. வணிக வரி கணக்கை சரிபார்த்து உரிய வரிகளை செலுத்திடுமாறு அவ்வணிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், பரந்த விளம்பரம் செய்யும் பொருட்டு செய்தித்தாள் மூலமும் இதுதொடர்பாக அறிக்கை பிரசுரிக்கப்பட்டது. அதன் விளைவாக மே 2022 -இல் 22,430 வணிகர்கள் ரூ. 6421.84 லட்சம் வரித் தொகையினை அரசுக்கு செலுத்தியுள்ளனர். வணிகர்களை வரி செலுத்த ஊக்குவிக்கும் விதமாக ஏனைய வணிகர்கள் அனைவரும் உடனடியாக தங்களது கணக்கை சரிபார்த்து அரசிற்கு செலுத்த வேண்டிய வரித் தொகை ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக செலுத்தி அபராதம் மற்றும் வட்டியினை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வரி ஏய்ப்பு ஏதேனும் வணிக வரித் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டால் வரித் தொகையுடன் சேர்த்து அபராதம் மற்றும் வட்டி ஆகியவை வசூலிக்கப்படும் என்று  வணிக வரித் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.