முக்கியச் செய்திகள்

யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: போலீஸார் விசாரணை

ஓமலூர் அருகே யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி செய்த இரண்டு வாலிபர்களை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து  விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்
புளியம்பட்டி என்ற இடத்தில் கடந்த 20ஆம் தேதி ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா
தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலத்தில் இருந்து இரண்டு வாலிபர்கள் மோட்டார் பைக்கில் வந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு பெரிய துப்பாக்கி, பாதி நிலையில் செய்த பெரிய துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவை இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், இருவரும் சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சை பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும், தாங்கள்
ஒரு இயற்கை ஆர்வலர்கள் என்றும், பறவைகளைப் பாதுகாக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும் யூடியூப் சேனல் மூலம் துப்பாக்கி செய்வது எப்படி என கண்டறிந்து
துப்பாக்கிகளை செய்ததாகவும் கூறினர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த
துப்பாக்கிகள், துப்பாக்கி செய்யும் உதிரிபாகங்கள், முகமூடிகள், கத்தி உள்ளிட்ட
ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு
பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சஞ்சை பிரகாஷ் பொறியியல் பட்டதாரி எனவும், நவீன் சக்கரவர்த்தி பிசிஏ படித்துள்ளதாகவும், 2 பட்டதாரிகளும் சேலம் அருகே உள்ள செட்டிச்சாவடி என்ற ஒரு வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு துப்பாக்கி
செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், துப்பாக்கி தயாரித்து வந்த 2 வாலிபர்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக ஓமலூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இதைத்
தொடர்ந்து நீதிமன்றம் 2 நாள்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வாலிபர்கள் இருவரையும் ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், கியூ பிரிவு டிஎஸ்பி செல்வகுமார் உள்ளிட்டோர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோலியின் முடிவை பிசிசிஐ மதிக்கிறது – கங்குலி

G SaravanaKumar

முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

EZHILARASAN D

நாளை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை; ஏற்பாடுகள் தீவிரம்

G SaravanaKumar