அரசுத் திட்டங்களை விரைவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில்…

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன என்பது குறித்து ஆய்வு நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர்களால் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகின்றார்.

அவ்வப்போது அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அறிவிப்புகளின் நிலை, தாமதமானால் அதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து பணிகளை முதல்வர் விரைவுபடுத்தி வருகிறார். தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துத் துறை செயலாளர்களுடன் முதல் நாள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பணிகளை விரைபடுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.