2 வது டெஸ்ட் : இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பணம் மேற்கோண்டுள்ளது. இத்தொடரில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாடுகிறன.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போடி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் ஜெயித்து முதல் இன்னிங்சில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது. அந்த அணியில் செனுரன் முத்துசாமி 109 ரன்கள் அடித்து அசத்தினார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.

288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 ஆம் நாள் ஆட்ட முடிவில் 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் ஸ்டப்ஸ் 94 ரன்கள் குவுத்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனை அடுத்து 549 ரன்கள் என்ற இமாலய  இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.