இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்ய குமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா 26 பந்துகளுக்கு 44 ரன்களும் கேப்டன் 27 பந்துகளுக்கு 47 ரன்களும் விளாசினர்.
இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இந்திய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி களமிறங்கியுள்ளது.







