அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’லாக் டவுன்’ . ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ள இப்படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.
நீண்ட நாளாக வெளியீட்டுக்குகாக காத்திருந்த ’லாக் டவுன்’ திரைப்படமானது கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி டிச. 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் லாக் டவுன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி படம் வருகின்ற 30ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.








