‘சைரன்’ திரைப்படத்தின் 2-வது சிங்கிள் வெளியானது!

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ திரைப்படத்தின் 2-வது பாடலான  ‘கண்ணம்மா’ பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில்,  நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘சைரன்’.  இத்திரைப்படத்தை சுஜாதா விஜய்குமார்…

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ திரைப்படத்தின் 2-வது பாடலான  ‘கண்ணம்மா’ பாடல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில்,  நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் ‘சைரன்’.  இத்திரைப்படத்தை சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார்.  இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2 தோற்றங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள இந்த திரைப்படம் குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.  ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.  ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி.

இதையும் படியுங்கள்:  நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

இந்நிலையில், சைரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் திரைப்படத்தின் போஸ்ட் புரெடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இதனிடையே இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகியது.

மேலும் இந்த படத்தின் டீசர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ‘சைரன்’ திரைப்படம் பிப். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணம்மா’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.