“இந்த ஆண்டில் புதுப்பேட்டை 2 படப்பிடிப்பு தொடங்கும்?” – இயக்குநர் செல்வராகவன்…!

புதுப்பேட்டை 2 திரைப்படம் இந்த ஆண்டிலாவது நடக்கும் என நம்புகிறேன் என   இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.   தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “புதுப்பேட்டை” திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வரும் திரைப்படமாக இருக்கிறது.…

புதுப்பேட்டை 2 திரைப்படம் இந்த ஆண்டிலாவது நடக்கும் என நம்புகிறேன் என   இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.  

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “புதுப்பேட்டை” திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்பட்டு வரும் திரைப்படமாக இருக்கிறது. இப்போதும் சினிமா ரசிகர்கள் அத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக “புதுப்பேட்டை” திரைப்படத்தின் திரைக்கதை, வசனம், மேக்கிங் ஆகியவைகளை மெச்சாத சினிமா ரசிகர்களே இல்லை என கூறலாம். இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது. ரத்தம், பழிவாங்கல் போன்ற இருள் சூழ்ந்த வன்முறையையும் அதன் பின்னுள்ள அரசியலையும் மிகவும் சிறப்பாக படமாக்கியிருந்தார் செல்வராகவன்.

இந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு எப்படியாவது புதுப்பேட்டை 2 படத்தை இயக்கியே தீருவேன் என செல்வராகவன் தற்போது ட்வீட் ஒன்றை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான சரியான கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம் தான் புதுப்பேட்டை. வரிசையாக பார்ட் 2 படங்கள் எடுக்கிறேன் என்கிற பெயரில் தொடர்ந்து முதல் பாகத்திற்கு பங்கம் விளைவித்து வரும் நிலையில், புதுப்பேட்டை 2 எப்படி உருவாகப் போகிறதோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.