இந்தியா – வங்தேசம் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டாகாவில் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மிர்புரில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக விளையாடிய வங்கதேச அணி 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா – வங்கதேசம் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா – வங்கதேசம் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, இன்று டாகாவில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால், ஒருநாள் தொடரை இழக்க நேரிடும் என்பதால், இந்திய அணி இதில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்திய அணி இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.