2வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயிப்பு

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 279 ரன்கள் இலக்காக தென்ஆப்பிக்கா அணி நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட…

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 279 ரன்கள் இலக்காக தென்ஆப்பிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 249 ரன்களுக்கு 240 ரன்கள் எடுத்து போராடி தோல்வியை சந்தித்து.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக்கும் ஜன்னிமன் மலனும் களமிறங்கினர். டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மலன் 25 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹெண்ட்ரிக்ஸ்சுக், மார்க்ரமும், அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

ஹெண்ட்ரிக்ஸ் 74 ரன்களும், மார்க்ரம் 79 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் கிளாசன் 35 ரன்களும், மில்லர் 34 ரன்களும் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.