2வது ஒரு நாள் கிரிக்கெட்-4 விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்; இங்கிலாந்து 246 ரன்கள்

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி…

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.

247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களிலும், ஜோ ரூட் 11 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஜோஸ் பட்லர் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

லிவிங்ஸ்டன் நிதானமாக விளையாடி 33 ரன்கள் எடுத்திருந்தபோது ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனார்.

மொயீன் அலி, டேவிட் வில்லி இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

மொயீன் அலி 47 ரன்களிலும், டேவிட் வில்லி 41 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த பந்துவீச்சாளர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இவ்வாறாக 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிகபட்சமாக யுஸ்வேந்திர சஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.