முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஜோஸ் பட்லர் அதிரடி-இலக்கை விரட்டிப் பிடிக்குமா குஜராத் டைட்டன்ஸ்?

10 அணிகள் பங்கேற்ற 15வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிகட்டம் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதலாவது தகுதிச் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் பிளே-ஆஃப் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடத் தொங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 3 ரன்களில் யஷ் தயாள் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இருப்பினும், அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

10வது ஓவர் வரை இந்தக் கூட்டணியை குஜராத் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. எனினும், 10வது ஓவரின் 5வது பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். அப்போது அவர் 26 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கி பட்லருக்குத் தோள் கொடுத்தார். வந்த வேகத்தில் 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் விளாசிய படிக்கல், 28 ரன்கள் எடுத்திருந்தபோது ஹார்திக் பாண்டியா வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக போல்டு ஆனார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பட்லர் மட்டும் நின்று விளையாடினார். யஷ் தயாள் வீசிய 17 வது ஓவரில் 4வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரை சதம் பதிவு செய்தார் பட்லர்.

18.2 வது ஓவரில் ஷமி வீசிய பந்தை பட்லர் தூக்கி அடித்தபோது டீப் மிட் விக்கெட்டில் நின்று கொண்டிருந்த ரஷீத் கான் ஓடிச் சென்று பிடிக்க முயன்றார். எனினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். இவ்வாறாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 56 பந்துகளில் (12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 188 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் போட்டியிலிருந்து ஜடேஜா விலகல்?

Ezhilarasan

குழந்தை ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்: டிவிட்டருக்கு மீண்டும் சிக்கல்

Halley Karthik

வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Arivazhagan CM