சுஷ்மிதா சென்னை திருமணம் செய்வேன்- முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித்மோடி

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னை திருமணம் செய்ய உள்ளதாக முன்னாள் ஐபிஎல்  தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் விஸ்லரூப வளர்ச்சி அடைந்த ஐபிஎல், ஒவ்வொரு…

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னை திருமணம் செய்ய உள்ளதாக முன்னாள் ஐபிஎல்  தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் விஸ்லரூப வளர்ச்சி அடைந்த ஐபிஎல், ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் ரசிகர்களால் சுமார் இரண்டு மாதங்கள் கொண்டாடப்படும் திருவிழா. அந்த ஐபிஎல்லுக்கு அடித்தளமிட்டவர் லலித்மோடி. நிறுவனர், முதல் தலைவர் என ஐபிஎல் வரலாற்றில் முக்கிய அங்கம் வகித்தவர் லலித் மோடி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணைதலைவராகவும் இருந்துள்ளார்.  பின்னர் ஐபிஎல் தொடர்பான காண்டிராக்ட்களை ஒதுக்கியதில் முறைகோடு, அந்நியச்செலவாணி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுகளிலும், வழக்குகளிலும் சிக்கினார். இந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க லண்டனுக்கு தப்பிச் சென்றதாகவு குற்றச்சாட்டுக்களில் சிக்கினார் லலித் மோடி.

வழக்குகள், சர்ச்சைகள் தொடர்பாகவே கடந்த சில ஆண்டுகளாக இவரது பெயர் அவ்வப்போது செய்திகளில் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது இவரது திருமணம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னை திருமணம் செய்வேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் லலித்மோடி பதிவிட்டுள்ளார்.

மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தனது வாழ்க்கைத் துணைவி சுஷ்மிதா சென்னுடனும், குடும்பத்தாருடனும் பயணம் முடித்துவிட்டு, லண்டன் திரும்பியிருப்பதாக டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். மாலத்தீவில் தானும் சுஷ்மிதா சென்னும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் லலித்மோடி வெளியிட்டிருந்தார். இதனால் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவே தகவல் பரவியது.

இந்நிலையில்  இது குறித்து விளக்கம் அளித்து மற்றொரு டிவிட்டர் பதிவை செய்துள்ள லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் திருமணம் நடைபெறவில்லை இருவரும் டேட்டிங் மட்டும் செய்கிறோம் என கூறியிருந்தார்.தங்களுக்கு திருமணமும் ஒருநாள் நடைபெறும் என்றும் டிவிட்டர் பக்கத்தில் லலித்மோடி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.