மறைந்த நடிகர் மயில்சாமிக்கு அண்ணாமலையார் கோவிலில் மோட்ச தீபம்

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம்,…

மறைந்த நடிகர் மயில்சாமிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

தீவிர சிவ பக்தனான இவர்  மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனையும் படியுங்கள் : ஏழ்மையிலும் ஏழ்மையை போக்க உதவிய மயில்சாமி

இதன் பின்னர் சாலிகிராமத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏவிஎம் மின்மயானத்தில் அவரது உடல்  தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுக  நின்று கண்ணீர் மல்க அவரது உடலுக்கு பிரியா விடை கொடுத்தனர்.

இதனையும் படியுங்கள் : மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?

அண்ணாமலையாரின் தீவிர பக்தருமான மயில்சாமி மறைவையொட்டி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதி அருகில் உள்ள மறைந்த நடிகர் மயில்சாமிக்காக மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.