முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

நடனமாடும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் – வைரலாகும் வீடியோ

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நடனமாடும் வீடியோ தற்போது வைராகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே மகளிருக்கான ஐபிஎல் (WPL) தொடர் இந்த ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான வீராங்கனைகள் ஏலமும் நடந்து முடிந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயிஅல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன. இதில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக மிதாலி ராஜ் உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ஐபிஎல் தொடர் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த போது, மகளிர் ஐபிஎல் இளம் வீராங்கனைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, இன்னும் சில ஆண்டுகளில் வெளிநாட்டில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகள் கூட இதுபோன்ற அமைப்பில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அண்மைச் செய்தி :  டிக்கெட் எடுக்காத பயணிகள் – ரூ.100 கோடி அபராதம் வசூலித்து மும்பை ரயில்வே கோட்டம் சாதனை

இந்நிலையில், மிதாலி ராஜும் மற்ற இரு வீராங்கனைகளும் இன்ஸ்டாகிராமில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான இரண்டு மணி நேரத்தில் 8 ஆயிரம் பேர் லைக்குகளை குவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா; அண்ணாமலை அறிவிப்பு!

Jayasheeba

முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அடிப்படை வசதிகள் செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

ஜார்ஜ் ப்ளாயிட் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை; மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் போராட்டம்

G SaravanaKumar