மதபோதகர் குறித்து அவதூறு கருத்து : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது..!!

மதப் போதகர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதப்…

மதப் போதகர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நாகர்கோவிலில் சைபர் கிரைம்
போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதப் போதகர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

” வெளிநாட்டு மத கலாச்சாரத்தின் உண்மை நிலை இதுதான், மதம் மாறிய இந்துக்களே
சிந்தியுங்கள் என்ற வார்த்தையுடன்”  , வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்ட திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணியின் கலை மற்றும் இலக்கிய பிரிவு மாநில
செயலாளருமான கனல் கண்ணன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு சைபர் கிரைம்
காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜரான கனல் கண்ணன் எட்டு மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டப் பிரிவு 295 ( மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது), சட்டப் பிரிவு 505/2 ( பிரிவினையை ஏற்படுத்துவது) ஆகிய இரண்டு பிரிவின் கீழ் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சைபர் கிரைம் போலீசார்  அவரை நீதிமன்ற காவலுக்கு அனுமதி கோரி நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.