பாஜக அடுத்து கண்டிப்பாக ஆட்சிக்கு வரும்.., ஆனால் பிரதமராக மோடி வருவாரா எனத் தெரியாது – சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

என்னை பொறுத்த வரை பாஜக அடுத்து கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் ஆனால் பிரதமராக மோடி வருவாரா என்பது தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்…

என்னை பொறுத்த வரை பாஜக அடுத்து கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் ஆனால் பிரதமராக மோடி வருவாரா என்பது தெரியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர் ஆர். சபையில் BRAHMIN GENOCIDE எனும் புத்தக
வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக
மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர்
கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினர்.


இதனை தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததாவது..

” சாதி வேறு வர்ணம் வேறு ஜாதி என்பது பிறப்பலிருந்து வருவது. வர்ணம் என்பது
குணத்தைப் பொறுத்தது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னர் காந்தியை சுட்டுக்கொன்ற சாவர்க்கர் பிராமணர் என்பதால் மகாராஷ்டிராவில் பிராமணர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள அனைவரின் டி.என்.ஏ.வும் ஒரே மாதிரிதான் உள்ளது. ஆரிய – திராவிட கோட்பாடே தவறானது. அது பிரிவினையை உண்டாக்குவது.  என்னை பொறுத்த வரை பாஜக அடுத்து கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் ஆனால் பிரதமராக மோடி வருவாரா என்பது தெரியாது.

பழங்கால கோயில்களை அரசு பராமரிப்பது சட்டவிரோதமானது. ஒரு இந்துவாகவும், ஒரு பிராமணராகவும் இருக்கும் நாம், தமிழ்நாட்டில் இந்து புரட்சியை மேற்கொள்ள
வேண்டும். இந்துக்கள் மீதான தாக்குதலை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

அறிவியலின் அடிப்படையில் சமஸ்கிருதம்தான் அடுத்தக்கட்டத்திற்கான மொழியாக இருக்கும். எனவே பிராமணர்களின் குழந்தைகளை கண்டிப்பாக சமஸ்கிருதம் படிக்க வைக்க வேண்டும். பிராமணர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், 3 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். பிறப்பின் அடிப்படையில் மட்டுமல்லாமல் பிராமணர்களுக்கான குணங்களை கொண்டவர்களையும் பிராமண சமூகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். “ என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.