ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம்: வரும் 13ம் தேதி வரை முகாமிட்டு முக்கிய ஆலோசனை..!

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் : வரும் 13ம் தேதி வரை முகாமிட்டு முக்கிய ஆலோசனை ஈடுபட உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு…

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் : வரும் 13ம் தேதி வரை முகாமிட்டு முக்கிய ஆலோசனை ஈடுபட உள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. சபாநாயகர் அப்பாவு அமைச்சர் நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5 மணி அளவில் விமானத்தில் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும் வரும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் இருக்கும் அவர், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிநீக்க விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து அவருடன் ஆலோசனை நடத்தி, செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் எனத் தெரிகிறது. இதனால் ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.