காதலித்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த தம்பி : அறைக்கு தீ வைத்த அண்ணன்

கன்னியாகுமரி அருகே தனது அறையை புதிதாக திருமணம் ஆன தம்பிக்கு ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த அண்ணன், அந்த அறைக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளையை சேர்ந்த விஜய குமார் ரோஸ்லி தம்பதிக்கு வினோத் குமார், விஜித் குமார்…

கன்னியாகுமரி அருகே தனது அறையை புதிதாக திருமணம் ஆன தம்பிக்கு ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த அண்ணன், அந்த அறைக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளையை சேர்ந்த விஜய குமார் ரோஸ்லி தம்பதிக்கு வினோத் குமார், விஜித் குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். வினோத் குமார் ஏற்கனவே திருமணமாகி அதே வீட்டில் வசித்து வருகிறார்.  விஜித்குமார் பெண் ஒருவரை  காதலித்து வந்துள்ளார். இவர்களின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
அண்ணன் தங்கிய அறையை தம்பிக்கு ஒதுக்கி அங்கு மணமக்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், அண்ணன் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அந்த அறையை தம்பி பூட்டி விட்டு  வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த அறையை பெட்ரோல் ஊற்றி அண்ணன் வினோத்குமார் தீ வைத்ததாக கூறப்படுகிறது.
புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.