வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நேற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தற்போது இது தொடர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் கோலாப்பூருக்கு 510 கிலோமீட்டர் தொலைவிலும், கலிங்கபட்டினத்திற்கு 590 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள் ளது.
இது தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை கோலாப்பூர் விசாகப்பட்டினம் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகே கரையை கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் என்ற பெயரிடப்பட்டுள்ளது.







