28 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கில் தீர்ப்பு; பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை!

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி கொலை வழக்கில், பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மர்ம மரணங்களில் கொலையை கூட, உயிரிழப்புஎன்று வழக்கை முடித்து விடும் அவலம் இன்றும் இருந்து கொண்டு…

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி கொலை வழக்கில், பாதிரியாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மர்ம மரணங்களில் கொலையை கூட, உயிரிழப்புஎன்று வழக்கை முடித்து விடும் அவலம் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒர் அவலத்தை தான் இன்று பார்க்கப்போகிறோம்…..

1992ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி, கேரள மாநிலம், கோட்டயத்திலுள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் உள்ள கிணற்றில் 19 வயதான கன்னியாஸ்திரி அபயா,வின் உடல் மிதந்து கிடந்துள்ளது…. பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த அபயாவின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருந்த இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் காவல்துறையினர் தங்கள் விசாரணையின் முடிவில், உயிரிழப்பு எனக்கூறி வழக்கை முடிப்பதிலேயே கவனம் செலுத்தினர்

சிஸ்டர் அபயா வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர் ஜோமோன் புத்தன்புரா என்பவர் தொடர்போராட்டம் மேற்கொண்டதையடுத்து, இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. . இந்த வழக்கில் சாட்சியையும் கொலையாளிகளையும் கண்டுபிடிப்பதில் சிபிஐ கடும் சிரமங்களை சந்தித்தது.

ஒரு சுவராஸ்ய திருப்பமாக, திருடன் அடைக்கா ராஜூ என்பவரின் சாட்சி, இந்த கொலை வழக்கில் முக்கியத்துவம் பெற்றது. கொலை நடந்த தினத்தில் தான் அங்கு திருட சென்றதாகவும், அப்போது இரண்டு பாதிரியார்களை அங்கு பார்த்ததாகவும் தெரிவித்ததையடுத்து, சிபிஐ தங்கள் கவனத்தை பாதிரியார்கள் பக்கம் திருப்பினர்.

சிபிஐயின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர் என்பவர், அபயா தங்கியிருந்த கான்வென்ட்க்கு சென்று அங்குள்ள செஃபி என்ற கன்னியாஸ்திரியுடன் முறைற்ற உறவில் இருந்து வந்தது தெரிந்தது.. அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை அபயா கண்டதால், அவரை கொலை செய்து,
கிணற்றில் விசியதும் விசாரணையில் வெளிவந்தது.

இதனையடுத்து பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர், கன்னியாஸ்திரி செஃபி ஆகியோர் குற்றவாளிகள் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், தீர்ப்பளித்தார். இதனையடுத்து 28 ஆண்டுகளுக்கு பின், அவர்களுக்கான தண்டனையை நீதிபதி அறிவித்தார். முதல் குற்றவாளியான பாதிரியார் தாமஸ் எம்.கோட்டூர், இரட்டை ஆயுள் தண்டனையும், 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2வது குற்றவாளி கன்னியாஸ்திரி செஃபிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply