உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
குறைந்து அளவு கொரோனா பாதிப்பு கொண்டவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிடக்கோரி பிரியங்கா என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று பரவுவதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
மோசமான விளைவுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மிக தீவிரமான கண்காணிப்பு மற்றும் திறமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.







