தமிழ்நாட்டில் புதிதாக 2,775 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 47…

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,775 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 18 ஆயிரத்து 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 3 ஆயிரத்து 188 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 53 ஆயிரத்து 61 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 621-ஆக குறைந்துள்ளது.  ஈரோட்டில் 198 பேருக்கும் சேலத்தில் 175 பேருக்கும் கோவையில் 298 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 5 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட சென்னை, செங்கல்பட்டு தவிர மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.