மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக, கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம், மேற்கு மலைத்தொடரில் அமைந்திருக்கிறது, கும்பகரை அருவி. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் நீராடச் செல்வது வழக்கம். கடந்த ஒரு மாதத்துக்கு முன் பெய்த மழை காரணமாக இந்த அருவில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததது.
ஆனால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சில நாட்களாக மழை இல்லாததால், இந்தப் பகுதியில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால், கடந்த சில நாட்களாக, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக கனமழை பெயதது.
இதன் காரணமாக, நேற்றிரவு முதல் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிக்கு கீழே உள்ள குளங்களும் நிறைந்து வருகின்றன. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







