26 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஊழியர்களின் ”கெட் டூ கெதர்” – தள்ளாத வயதிலும் பங்கேற்று நினைவுகளை பறிமாறிக் கொண்ட ஊழியர்கள்

திருச்சியில் செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்றில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் சங்கமித்த கெட்டூகெதர் நிகழ்ச்சி இன்றைய தலைமுறையினரை வியப்படைய செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம். காவேரி என்ஜினியரிங் இண்டஸ்ட்ரிஸ்…

திருச்சியில் செயல்பட்டு வந்த நிறுவனம் ஒன்றில் சுமார் 26 ஆண்டுகளுக்கு
முன்னர் பணியாற்றிய பணியாளர்கள் சங்கமித்த கெட்டூகெதர் நிகழ்ச்சி இன்றைய
தலைமுறையினரை வியப்படைய செய்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

காவேரி என்ஜினியரிங் இண்டஸ்ட்ரிஸ் லிமிட்டட் என்கிற நிறுவனம் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள்,என்னை சுத்தகரிப்பு நிலையங்கள் மற்றும் உரம் தயாரிப்பு போன்ற நிறுவனங்களுக்கு பாகங்கள் தயார் செய்து விற்பனை செய்து வந்தது.

1962ல் துவங்கிய இந்நிறுவனத்திற்கு சென்னை மற்றும் டெல்லியில் தலைமை அலுவலகங்கள் இருந்தது. குறிப்பாக திருச்சியில் அமைந்த தொழிற்சாலையில்  உற்பத்தி திறனை அதிகம் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிறுவனம் மூடப்பட்டு ஏறத்தாழ 26 ஆண்டுகள் கடந்த விட்டன. இந்த நிலையில்  நிறுவனத்தில்  பணியாற்றிய ஊழியர்கள் கலந்து கொண்ட  “கெட் டூ கெதர்”  நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

1960 மற்றும் 70களில் பணியாற்றிய எண்ணற்ற பணியாளர்கள் தள்ளாத வயதிலும்
தங்களுடன் பணியாற்றிய நண்பர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஆவலுடன் வருகை தந்திருந்தனர்.  ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்ததோடு , தங்களது காலகட்டத்தில் நடந்த பல்வேறு சுவாரஷ்யமான விஷயங்களை மலரும் நினைவுகளாக பறிமாறிக் கொண்டனர்.

காவேரி என்ஜினியரிங் நிறுவனத்தில் பணியாற்றியவர் நாகப்பன் தெரிவித்ததாவது..

”நாங்கள் அனைவரும் சேர்ந்து அமர்ந்து உணவு பரிமாறி,  பாட்டு பாடி பல்வேறு போட்டிகளை வைத்து பரிசுகளாக தங்க நாணயம் வழங்கி மொத்தத்தில் திருவிழாவாக நாங்கள் இதை கொண்டாடியுள்ளோம்.” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த விஸ்வநாதன் தெரிவித்ததாவது..

” இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுடன் பணியாற்றிய நபர்களை பார்க்கும் போது கண்டும் காணாமல் செல்லும் இந்த காலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்
பணியாற்றிய நண்பர்களை எல்லாம் தேடி பிடித்து அவர்களின் குடும்பத்துடன் சங்கமிக்க
செய்த இவர்களின் கெட் டூ கேதர் நிகழ்ச்சி உண்மையில் நம்மை வியப்படைய செய்கிறது.
ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய இவர்கள் ஒரே குடும்பமாக மாறி ஒருவருக்கு ஒருவர்
அளவாளாவிய இத்தருனத்தை இனி மீதமிருக்கும் வாழ் நாளில் நிச்சயம் மறக்க போவதில்லை என்பதே நிதர்சனம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.