முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் போட்டி : CSKவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி திரில் வெற்றி..!!

பஞ்சாப் கிங்ஸ் அணி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி20  தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாம  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ருதுராஜ் கெய்வாட் – டெவோன் கான்வே ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடிய நிலையில் சிக்கந்தர் ராஜாவின் பந்தில்  37 ரன்களுடன் ருதுராஜ் வெளியேறினார்.

டெவோன் கான்வே நிலைத்து நின்று ஆடினார். இதன் பின்னர் அடுத்தடுத்து களமிறமிறங்கிய வீரர்களான ஷிவம் தூபே ,மொயின் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் பின்னர்  ஜடேஜா 12 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

 20 ஓவர்களின்  முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 200 ரன்களை குவித்தது.  தோனி 13 ரன்களுடனும், டெவோன் கான்வே 92 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. முதல் 6 ஓவர்களின் நல்ல தொடக்கத்தை கொடுத்தது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். தவான்  28 ரன்னில் ஆட்டமிழக்க,   பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக ஆடி 42 ரன்கள் விளாசினார்.

இதன் பின்னர் லிவிங்ஸ்டோன்- சாம் கரன் ஜோடி பொறுப்பாக விளையாடி  அணியின் ரன்களை உயர்த்தியது.  விங்ஸ்டோன் 4 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்போது  ஜிதேஷ் சர்மா, ஷாரூக் கான் ஜோடி பஞ்சாப் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரன்களை கட்டுப்படுத்தினாலும் கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது.  கடைசி பந்தில் மூன்று ரன்கள் என்ற நிலையில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் திரில் ஆக மூன்று ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் அணியை தற்போது 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்

Dinesh A

‘தொடர்ந்து கிராமத்துப் படங்கள் பண்ண ஆசையாக உள்ளது’ – நடிகர் கார்த்தி

Arivazhagan Chinnasamy

லாரி ஓட்டுநருடன் திடீர் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி! வைரலாகும் வீடியோ

Web Editor