தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று சுமார் 25,000 பேர் இன்று ஒரே நாளில் பணிக்காலத்தை நிறைவு செய்கின்றனர்.
முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், 60 வயதைப் பூர்த்தி செய்துள்ள சுமார் 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணிக்காலத்தை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி கல்வியாண்டின் நடுவில் பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியர்கள், கல்வியாண்டு முடியும் வரை பணியாற்றிவிட்டு இன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசில் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 25,000 பேர் ஓய்வு பெறுவதால் இந்த எண்ணிக்கை 3.25 லட்சமாக
உயர்ந்துள்ளது. பணி ஓய்வு பெறும் நபர்களுக்கு அவரவர் சார்ந்த அலுவலகங்கள், பள்ளிகளில் இன்று பிரிவு உபச்சார விழா நடத்தப்படுகிறது.







