எனது ரோல் மாடல் ரஜினியும், விஜயும்தான்: லெஜண்ட் சரவணன்

பெஸ்ட்டு பெஸ்ட்டு சரவணா பெஸ்ட்டு…என்று தனது விளம்பர படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அருள் சரவணன்.விளம்பரங்களில் முன்னணி நட்சத்திரங்களான தமன்னா, ஹன்சிகா போற்ற நட்சத்திரங்களுடன் பங்கேற்று…

பெஸ்ட்டு பெஸ்ட்டு சரவணா பெஸ்ட்டு…என்று தனது விளம்பர படங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அருள் சரவணன்.விளம்பரங்களில் முன்னணி நட்சத்திரங்களான தமன்னா, ஹன்சிகா போற்ற நட்சத்திரங்களுடன் பங்கேற்று உயர்ந்த தரத்தில் உருவாக்கி மக்கள் மனதில் தன் வருகையை பதிவு செய்தார்.

இந்த விளம்பர படங்களை குறித்து சமூக வலைதளைங்களில் பல கேலிகளும் கிண்டல்களும் எழுந்த நிலையில் அவற்றை எல்லாம் புறம்தள்ளி தனக்கான வழியில் பயணித்தார் சரவணன்.விளம்பர படங்களை தொடர்ந்து சினிமாவிலும் தனது அறிவிப்பை வெளியிட்டார் லெஜெண்ட் சரவணன்.

உல்லாசம்,விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில், தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வெளியாகவுள்ளது. தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மொசலோ மொசலு என்ற வரிகளுடன் முதல் பாடல் வெளியாகி யூடியூபில் பெரிய ஹிட் நடித்துள்ள சூழலில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளும் விழாவில் பங்கேற்றனர்.இதில் பேசிய அருள் சரவணன், பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் பெரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு ரோல் மாடல் விஜய்யும், ரஜினியும்தான் எனவும் குறிப்பிடுகிறார். தனது உருவம் குறித்து ஆயிரம் விமர்சனங்களும் கேலிகளும் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் தன் வழியில் தனக்கே உண்டான பாணியில் சென்று கொண்டிருக்கிறார் லெஜெண்ட் சரவணன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.