பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி படிப்புகள் செல்லாது: யூஜிசி

பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொலைதூர கல்வி என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அண்ணாமலை பல்கலைக்கழகம்தான். அதேபோல, சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள…

பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொலைதூர கல்வி என்றால் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அண்ணாமலை பல்கலைக்கழகம்தான். அதேபோல, சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதி மாணவர்களின் முதல் தேர்வாக பெரியார் பல்கலைக்கழகம் இருக்கும். நேரடியாக கல்லூரிகளில் வந்து பயில முடியாத ஆயிரக்கணக்கானோர் பெரியார் பல்கலைக் கழகத்தின் வாயிலாக தொலைதூர கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், முன் அனுமதி பெறாமல் பெரியார் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி, ஆன்லைன் படிப்புகளை நடத்திவருவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்குமாறு ஆளுநருக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் யூஜிசி கடிதம் எழுதியுள்ளது. அதேபோல, மாணவர்கள் யாரும் பெரியார் பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூரக்கல்வி படிப்புகளிலோ, ஆன்லைன் படிப்புகளிலோ சேர வேண்டாம் எனவும் யூஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி’

இதற்கு முன்பு, தங்களிடம் அனுமதி பெறாமல் 2015-2016-ம் ஆண்டு முதல், அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர மற்றும் திறந்தநிலைக்கல்வி படிப்புகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்து, மாணவர்கள் யாரும் இனி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி படிப்பிலோ, திறந்தநிலை படிப்பிலோ சேர வேண்டாம் எனவும் பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் தொலைதூரக்கல்வி படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.