முக்கியச் செய்திகள் இந்தியா

திருப்பதியில் குவியும் பக்தர்கள் – 2 மாதங்களில் ரூ.250 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதங்களில் 250 கோடி ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

இந்தியாவின் பணக்கார சாமியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது. ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பெருமாள் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே இங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பலமணி நேரம் காத்திருத்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதிக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை தொடர்ந்து ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதுகின்றனர். கோடை விடுமுறையையொட்டி திருப்பதில் தினமும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் ரூ.10 கோடி காணிக்கை 

நேற்றைய தினம்  திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரான கோபால் பாலகிருஷ்ணன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான திட்டம், கோ சம்ரக் ஷன திட்டம், தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனை வேத பரிரத்ஷன அறக்கட்டளை, அன்னபிரசாத திட்டம், சர்வ ஸ்ரேயாஸ் திட்டம், ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் என மொத்தம் 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

மேலும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஏ-ஸ்டார் டெஸ்டிங் அண்ட் இன்ஸ்பெக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தேவஸ்தான வித்யாதன திட்டத்துக்கு ரூ.1 கோடி, பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் சார்பில் கோயில் கட்டும் திட்டத்துக்கு ரூ. 1 கோடி, ஸீ-ஹப் இன்ஸ்பெக் ஷன் சர்வீசஸ் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாரம்பரிய அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பக்தர்கள் ஒரே நாளில் ஏழுமலையானுக்கு ரூ.10 கோடி நன்கொடை வழங்கி வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை பெறப்படுவது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

2 மாதத்தில் ரூ.250 கோடி காணிக்கை 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2 மாதத்தில் 250 கோடி ரூபாயை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.127 கோடியும், மே மாதத்தில் ரூ.123 கோடியும் என மொத்தம் ரூ.250 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

இது தவிர பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் பெரும் தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், பத்திரங்களை தவிர, தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு உலகமெங்கிலும் உள்ள பக்தர்கள் ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் காணிக்கை வழங்கி வருகின்றனர். மேலும், இ-உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

கோடை விடுமுறையால் தினமும் குறைந்தது 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 லட்சம் பக்தர்களும், மே மாதத்தில் 22 லட்சம் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.53 கோடி மோசடி; ஆசிரியர் கைது

EZHILARASAN D

தேவைப்படும் போது ஆளுநரை கொண்டாடுகிறது திமுக: ஜெயக்குமார்

EZHILARASAN D

ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

Halley Karthik