கோவை விமான நிலையத்தில் அறிமுகமாகும் ரோபோ!!!

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் தன்னிச்சையான ரோபோக்களை அறிமுகப்படுத்தபட உள்ளது. கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் திருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் தன்னிச்சையான ரோபோக்களை அறிமுகப்படுத்தபட உள்ளது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் திருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கோவை விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு புதிதாக வரும் பயணிகள் பெரும்பாலானோர் இணைப்பு விமானத்துக்கு செல்லும் வழி, குடிநீர் இருக்கும் இடம், கழிவறை உள்ள பகுதி, பொருட்களை வைக்கும் இடம், சோதனை செய்யும் இடம் ஆகியவை பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். ஆங்காங்கே தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதனால் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் கோவை விமான நிலையத்தில் செயற்கை நுண்ணறிவுடன் தன்னிச்சையாக இயங்கும் ரோபோக்கள் வழிகாட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ரோபோக்கள் விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான தகவல்களை தருவதோடு, பயணிகளுக்கு தேவையான தகவல்கள், விமானம் குறித்த தகவல்கள், விளம்பரம் குறித்த தகவல்களை வழங்குகிறது. நகரும்தன்மையுடன் உருவாக்கபட்டுள்ள இந்த ரோபோக்கள், பயணிகள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதோடு, விமான நிலைய உதவி மையத்தில் வீடியோ கால் மூலம் பேசும் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகள் எளிதாக விமான நிலைய உதவி மையத்தை தொடர்பு கொள்ள முடியும் என.கோவை விமான நிலையத்தில் உள்ள மென்பொருள் மூலம் இயங்கும் இந்த ரோபோக்கள் நாளை முதல் கோவை விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.