தகிக்கும் வெயிலின் உக்கிரம்; 25 பேர் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிராவில் கடும் வெயிலுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடும் வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில…

மகாராஷ்டிராவில் கடும் வெயிலுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், கடும் வெப்பம் தகித்து வருகிறது. வெயிலில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்தியாவில் பல இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இதுவரை வெப்ப பக்கவாதத்திற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இதுதான் மிக அதிகமாகும். கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 374 பேர் வெப்ப பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. வெயிலின் உக்கிரத்திற்கு நாக்பூரில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அம்ராவதியில் ஒருவர், அகோலாவில் 3 பேர், மரத்வாடா மற்றும் ஜல்னா ஆகிய மாவட்டங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்ப பக்கவாதம் என்பது ஒரு தீவிரமான வெப்பம் தொடர்பான அவசரநிலை ஆகும். இது வெப்பத்தின் வெளிப்பாட்டின் காரணமாக உடலின் உட்புற வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது ஏற்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெப்பப் பக்கவாதம் ஏற்பட்டதாக மாநிலம் எதுவும் தெரிவிக்கவில்லை. 2019 இல், ஒன்பது இறப்புகள் பதிவாகியுள்ளன.

நாட்டின் பல பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான வெப்ப காலத்தை எதிர்கொள்கின்றன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாவதாக மகாராஷ்டிரா மாநில கண்காணிப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் மத்திய மகாராஷ்டிரா, விதர்பா மாவட்டங்களில் வெயில் 46 டிகிரி வரை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.