தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் செல்கிறார்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இங்கிலாந்து செல்கிறார். மே 4 ஆம் தேதி இரவு லண்டன் செல்லும் அமைச்சர் மனோதங்கராஜ் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த தொழில் முதலீட்டாளார்களை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3 நாட்கள் பயணமாக இங்கிலாந்து செல்லும் அமைச்சர் மனோ தங்கராஜ், 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர்கள் ஒன்றுகூடும் மாநாட்டிலும் கலந்துகொள்ள உள்ளார்.
இதற்கு முன் இதே ஆட்சியில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். தொடர்ந்து, அபுதாபியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கடல் கடந்து சென்று, கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி துபாய், அபுதாபியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு 6,100 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகளை ஈட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.