“டாஸ்மாக் கடைகளில் கடந்த 5 ஆண்டுகளில் 24 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 24ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, “நான் துரோகி அல்ல, தமிழ் நாட்டை போதைக்கு அடிமை ஆக்கி உள்ள நீங்கள் தான் துரோகி.

ஊழல் இல்லாத துறையே இல்லை என்கிற அளவில் அனைத்து துறைகளிலும் ஊழல். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளித்தது அதிமுக ஆட்சி. மக்கள் திட்டத்திற்கு வரிப்பணம் செலவழிக்காமல்,
வீண் விளம்பரத்திற்கு செலவழிக்கிறார் ஸ்டாலின்.

சட்டமன்றத்தில் எனக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றவர் ஸ்டாலின். மக்களுக்காக சட்டமன்றத்தில் அழுத்தாமாக பேசிய கட்சி அதிமுக. சட்டமன்றத்தில் எனக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றவர் ஸ்டாலின் மக்களுக்காக சட்டமன்றத்தில் அழுத்தாமாக பேசிய கட்சி அதிமுக. திமுகவிற்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தால் தயவு செய்து எக்ஸ்ரே எடுத்து பாருங்கள்.

என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நேரடியாக சந்தித்தவன் நான். அதில் நிரபராதி என நிரூபித்துவிட்டு வந்துள்ளேன். ஸ்டாலினுக்கு தான் பயம் அதிகமாக உள்ளது. எனக்கு இல்லை. வீட்டு வரி 100% உயர்த்தினார்கள். மின் கட்டணம் உயர்த்தியுள்ளனர். மாநகராட்சி கட்டுமான வரி 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு.

மீண்டும் மக்களின் ஆதரவோடு அண்ணா திமுக ஆட்சி மலரும், வெளிநாட்டுக்குச் சென்ற அவாலா பணத்தை மீட்டு திட்டங்களைக் கொண்டு வருவோம். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் வருகின்ற தேர்தல். அண்ணா திமுக ஒரு ஜனநாயக கட்சி. அண்ணா திமுக கட்சிக்கு யார் வேண்டுமானாலும் முதலமைச்சராக வரலாம் பொதுச் செயலாளர் வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.